பாடசாலை நேர பிரத்தியேக வகுப்புகளை தடுக்க நகர பிதாவிடம் வேண்டுகோள்"

மக்களாகிய நாம் நல்ல சிந்தனையும், நல்ல கொள்கையும், நல்ல மனோநிலையும் கொண்ட ஓர் சிறந்த கல்விமானாகிய ரின்சாத் அகமட் அவர்களை மேயராக தெரிவு செய்து நல்ல சிந்தனையும், நல்ல கொள்கையும், நல்ல மனோநிலையும் கொண்ட ஓர் சிறந்த கல்விமானாகிய ரின்சாத் அகமட் அவர்களை மேயராக தெரிவு செய்து இருக்கிறோம்.
அவரது ஆட்சி காலத்தில் புத்தளம் நகரம் பல முன்னேற்றங்கள் அடையும் என்ற நம்பிக்கை பலருக்கும் உண்டு. அவர் எமது நகரில் முதல் பிரஜை என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார். அவரை "நகர பிதா" என்ற அழகிய நாமம் சூட்டி நாம் அழைக்கின்றோம். இந்த நகரில் வாழும் ஒவ்வொரு பிரஜையின் சந்தோஷம், துக்கம் என்பவற்றில் பங்கு கொள்ளக் கூடியவராகவும், அன்பு காட்டக் கூடியவராகவும் அவர் இருக்கிறார்.
அவர் சிறந்த கல்விமான் என்பதால் எமது நகரின் கல்வித்துறை சார்ந்த விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவரது கடமை. நேற்று புத்தளம் மாநகர சபை உறுப்பினர் இஷாம் மரைக்கார் வெளியிட்ட ஒரு வீடியோ காட்சியை பார்த்தேன். அதில் பாடசாலை நேரங்களில் நடத்தப்படும் பிரத்தியேக வகுப்புக்கள் சம்மந்தமாக சுட்டிக்காட்டி இருந்தார்.
நானும் இதற்கு முன்னர் இந்த விடயத்தை அடிக்கடி முகநூல் மூலமாக மக்களுக்கு விழிப்பூட்டி வந்துள்ளேன். எனவே பாடசாலை நேரங்களில் நடத்தப்படும் பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்யும் அதிகாரம் நகர பிதா அவர்களுக்கு இருப்பதால் அவர் தனது அதிகாரத்தை பயன்படுதி தனது அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் பாடசாலை நேரங்களில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்துவதை தடை செய்யுமாறு கெளரவ மேயர் அவர்களை தயவாகவும், அன்பாகவும் வேண்டிக் கொள்கிறேன்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



